2/9/2011 11:41:54 AM
'காதலர் தினத்தில் காதலி நயன்தாராவுடன் ரொமான்ஸா?' என்ற கேள்விக்கு பிரபுதேவா ருசிகர பதில் அளித்தார். பிரபுதேவா கூறியயிருப்பதாவது: விதிப்படிதான் எல்லாம் நடக்கிறது. படிப்பில் நான் கொஞ்சம் சுமார்தான். அதனால் படிப்பை விட்டு டான்ஸ் மாஸ்டர் ஆனேன். பிறகு நடிகன். இப்போது இயக்குனர். வாழ்வில் எது வந்தாலும் ஏற்றுக் கொள்கிறேன். சந்தோஷமாக இருக்கிறேன். பொதுவாகவே, மற்றவர்கள் புண்படும்படி ஒருபோதும் நடந்ததில்லை. அது என் சுபாவம். 'காதலன்' படத்தில் 'டேக் இட் ஈஸி பாலிசி' என்று பாடியதுபோல்தான் எதையும் எடுத்துக்கொள்கிறேன்.
'நயன்தாராவுடன் திருமணமா?' என்கிறார்கள். இப்போதுள்ள சூழலில் எந்த பரபரப்பு அறிவிப்பும் தரும் எண்ணம் இல்லை. எல்லாவற்றுக்கும் நேரம் காலம் இருக்கிறது. சரியான நேரம் வரும்போது எல்லாம் நடக்கும். சினிமா வாழ்க்கை நன்றாக இருக்கிறது. 'ஜெயம்' ரவி நடிக்கும் 'எங்கேயும் காதல்' படம் முடித்துவிட்டேன். இது காதல் கதை. அடுத்து விஷால் படம். இது ஆக்ஷன் கதை. அக்ஷய் குமாருடன் பணியாற்ற உள்ள இந்தி படத்துக்கான வேலைகளையும் தொடங்கிவிட்டேன். 'வரும் காதலர் தினத்தன்று யாருடன் இருக்கப்போகிறீர்கள்?' என்கிறார்கள். சத்தியமாக நீங்கள் நினைப்பவருடன் இருக்கப்போவதில்லை. அன்றைய தினம் மும்பையில் அக்ஷய் படத்துக்கான கிளைமாக்ஸ் காட்சி பற்றி டிஸ்கஷன்.
இவ்வாறு பிரபுதேவா கூறினார்.
நயன்தாரா அதே பதில்
'பிரபுதேவாவுடன் எப்போது திருமணம்?' என்று சமீபத்தில் நயன்தாராவிடம் கேட்டபோது, 'எல்லாவற்றுக்கும் நேரம் காலம் இருக்கிறது. சரியான நேரம் வரும்போது எல்லாம் நடக்கும்' என்று பேசிவைத்ததுபோல பிரபுதேவா சொன்ன அதே டயலாக்கை பதிலாகச் சொன்னார்.
Post a Comment