2/9/2011 12:00:32 PM
அஞ்சலி கூறியது: 'அங்காடித் தெருÕவிலிருந்தே என்னிடம் நிறைய நடிப்பை எதிர்பார்க்கிறார்கள். நடிப்பில் கொஞ்சம் குறைந்தாலும் உடனே ரசிகர்கள் கேட்கிறார்கள். அதனால் எனது படங்களை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறேன். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படத்தில் 'அங்காடி தெருÕ போல் வெயிட்டான வேடம். வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் இதற்கு கால்ஷீட் ஒதுக்குவது கஷ்டமாக இருந்தது. 'கதையை கேட்டுவிட்டு பிறகு சொல்லுங்கள்Õ என்றார் முருகதாஸ். கதை கேட்டேன். பிடித்தது. இதில் எனது இன்னொரு பரிமாணத்தை பார்க்கலாம். ஷூட்டிங் தொடங்கிவிட்டது. ஒரு மாதம் திருச்சியில் நடக்கிறது. ஹீரோ ஜெய்க்கு இணையான வேடம். அது எனக்கு சவால். போட்டியில் நிச்சயம் ஜெயிப்பேன். ஆனால் இந்த நடிப்பு போதாது. அதற்கு மேல் கேரக்டர்கள் எதிர்பார்க்கிறேன். கிளாமராக நடிப்பீர்களா? என்கிறார்கள். அந்த எல்லைக்குள் இன்னும் போகவில்லை. கிளாமராக நடிக்க மாட்டேன் என்றில்லை. ஆனால் கிளாமரை மட்டுமே நம்ப மாட்டேன். 4 டூயட் வேண்டுமா? 4 காட்சிகள் வேண்டுமா? என்றால் டூயட் வேண்டாம். 4 காட்சிகள் கொடுங்கள்? என்றுதான் தேர்வு
செய்வேன்.
Post a Comment