தள்ளிப்போனது ராணா ஷூட்டிங்!
4/20/2011 10:55:09 AM
4/20/2011 10:55:09 AM
சென்னையில் நேற்று முன்தினம் தொடங்குவதாக இருந்த 'ராணா' பட ஷூட்டிங் தள்ளிப்போயுள்ளது. ரஜினிகாந்த் 3 வேடங்களில் நடிக்கும் படம் 'ராணா'. ரஜினி ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். 17ம் நூற்றாண்டு கதையான இதன் ஷூட்டிங் கடந்த திங்கட்கிழமை சென்னையில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், தொடங்கவில்லை. தீபிகா கால்ஷீட் இல்லாததால்தான் ஷூட்டிங் ஆரம்பமாகவில்லை என்று கூறப்பட்டது. இதுபற்றி பட யூனிட்டில் கேட்டபோது, 'இந்தப் படத்துக்காக ஏவி.எம் ஸ்டூடியோவில் பிரமாண்ட செட் போடப்பட்டு வருகிறது. செட் ஒர்க் இன்னும் முடியாததால் இம்மாத இறுதியில் ஷூட்டிங் தொடங்குகிறது' என்றனர்.
Source: Dinakaran
Post a Comment