4/20/2011 10:36:10 AM
நடிகர் விஜய் வீட்டில் மர்ம ஆசாமிகள் கல்வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சாலிகிராமம் ஸ்டேட் பேங்க் காலனி 3வது தெருவில், நடிகர் விஜய்க்கு சொந்தமான வீடு இருக்கிறது. அதை தற்போது பிரபல திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு வாடகைக்கு கொடுத்து இருக்கிறார். அந்த வீட்டில் கீழ்தளத்தில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. விஜய் ஆண்டனி குடும்பத்துடன் முதல் தளத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மர்ம ஆசாமிகள் சிலர் விஜய் வீட்டின் முதல் தளத்தில் உள்ள கண்ணாடி அறைகள் மீது கற்களை வீசினார்கள். இதில் கண்ணாடிகள் அனைத்தும் நொறுங்கியது. சத்தம் கேட்டு வந்த விஜய் ஆண்டனி, அவரது மனைவி ஜன்னல் கண்ணாடி உடைந்திருப்பதை கண்டு திடுக்கிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Post a Comment