நடிகை அபர்ணாவுக்கு ஜூன் 29ம் தேதி கல்யாணம்

|

Tags: bharani, dancer, debut movie, June, june 29, Kannappan, malayalam movies, movie, son, sundar, tamil, theatre owner, wedlock

Aparna
நடிகை அபர்ணாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. ஜூன் 29ம் தேதி அவர் டாக்டர் மாப்பிள்ளையை மணக்கிறார். சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது.

நடிகை அபர்ணா புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படம் மூலம் சினிமா நாயகியாக மாறியவர். அதைத் தொடர்ந்து ஏபிசிடி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கல்வி நிறுவனம் ஒன்றிலும் அவர் நிர்வாகியாக இருந்து வருகிறார். நடிகை அபர்ணா ஒரு பரதநாட்டியக் கலைஞரும் கூட.

இந்த நிலையில் இவருக்கு கல்யாணம் நிச்சயம் செய்துள்ளனர். சென்னை, பூந்தமல்லி சுந்தர் தியேட்டர் உரிமையாளர் கண்ணப்பனின் மகன் டாக்டர் பரணியை மணக்கவுள்ளார் அபர்ணா. பரணி, எம்.எஸ் டாக்டர் ஆவார். சென்னையில் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணராக இருக்கிறார்.

இவர்களது திருமண நிச்சயதார்த்தம் தி.நகரில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் ஜூன் 8ம் தேதி இரவு நடைபெறுகிறது. இதையடுத்து ஜூன் 29ம் தேதி வானகரம், ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் கல்யாணம் நடைபெறவுள்ளது.

அதற்கு அடுத்த நாள் ராஜா அண்ணாமலைபுரம், ராமநாதன் செட்டியார் ஹாலில் வரவேற்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
English summary
Actress Aparna set to enter the wedlock on June 29. She will marry Dr. Bharani. He is the son of Poonthamalli Sundar theatre owner Kannappan. Aparna's debut movie in Tamil is Pudukottayil Irunthu Saravanan. She has acted in some Tamil and Malayalam movies. She is a dancer too.
 

Post a Comment