சும்மா எதுக்கு பில்ட் அப்...நல்லாருந்தா படம் ஓடும் - த்ரிஷா

|

Tags: film, films, firm, payment, producers, promos, self, summaryTrisha

Trisha
கோடி கோடியா கொட்டிக் கொடுத்தாலும் மோசமான படங்களில் நடிப்பதாக இல்லை. மேலும் ஒரு படம் உருவாகிக் கொண்டிருக்கும்போதே அதைப் பற்றி ஆஹா ஓஹோ என புகழ்வது வேஸ்ட். நல்ல படமா இருந்தா ஓடும், என்றார் நடிகை த்ரிஷா.

ஹைதராபாதில் த்ரிஷா அளித்த பேட்டி:

ஒரு படத்தில் நடிக்கும் போது நடிகர், நடிகைகள் இஷ்டத்துக்கும் அடித்துவிடுகின்றனர். தாங்கள் நடிக்கும் படத்தை ஆஹா ஓஹோவென புகழ்ந்து பேசுகிறார்கள். ஆனால் படம் ரிலீசான பிறகு ஒரு சில நாட்களிலேயே தியேட்டரை விட்டு போய்விடுகிறது.

எனவே இந்த மாதிரி வெற்று பில்ட் அப் எதற்கு? தாங்கள் நடிக்கும் படங்களை தாங்களே மிகைப்படுத்தி பேசுவது எனக்கு பிடிக்காது. எல்லா படங்களும் வெற்றி பெறுவது இல்லை. படங்கள் ஓடுமா? ஓடாதா? என்பதை தீர்மானிப்பவர்கள் ரசிகர்கள். அவர்கள் முடிவுக்கு விட்டு விட வேண்டும்.

படம் ரிலீசுக்கு முன்பே அதை புகழ்வது ரசிகர்களை ஏமாற்றுவதுபோல் ஆகி விடும். நல்ல கதையம்சம் உள்ள படங்களையே தேர்வு செய்து நடிக்கிறேன். எனது கேரக்டர் நன்றாக இருந்தாலும் படம் வெற்றி பெற வேண்டும். கதாபாத்திரம் நன்றாக அமைந்தாலும் தோல்வி அடையும் படங்களில் நடிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.

கூடுதல் சம்பளம் தருவதாக ஆசை காட்டி, கோடி கோடியாகக் கொட்டினாலும் தோல்வி அடையும் படங்களில் நடிக்க மாட்டேன்," என்றார் த்ரிஷா.
English summary
Trisha firm on her decision to not to appearing in films with poor stories, even the producers offer big payment. She has also slammed the self praising of stars in film promos of their films. She told, "just let the public to speak or praise the film".
 

Post a Comment