5/4/2011 10:22:54 AM
மரத்தைச் சுற்றி பாடல்களுக்கு ஆடுவது, ஹீரோவை துரத்தி துரத்தி காதலிப்பது போன்ற கேரக்டர்களில் நடித்து போரடித்துவிட்டது என்றார் சதா. இதுபற்றி அவர் கூறியதாவது: கன்னடம், தெலுங்கு, தமிழில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறேன். கன்னடத்தில் உபேந்திரா ஜோடியாக நடிக்கிறேன். தமிழில் ஆர்.கே. ஜோடியாக 'புலிவேஷம்' இருக்கிறது. ஏன் அதிகப்படங்களில் நடிக்கவில்லை என்று கேட்கிறார்கள். ஹீரோவை துரத்தி துரத்தி காதலிப்பது, 3 பாடலுக்கு மரத்தை சுற்றி டான்ஸ் ஆடிவிட்டு அடுத்த காட்சியில் இருந்து காணாமல் போவது போன்ற கதைகளில் நிறைய நடித்துவிட்டேன். இது எனக்கும் ரசிகர்களுக்கும் போரடித்துவிட்டது. இனி அதைவிடுத்து கதைக்கு முக்கியத்துவமுள்ள கேரக்டரை தேடுகிறேன். படத்தில் முக்கியமான கேரக்டர் என்றால் வெறும் 10 சீன்களில் கூட நடிக்க நான் ரெடி. அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து எல்லா நேரமும் நடித்துக்கொண்டே இருக்க விரும்பவில்லை. தோழிகளுடனும் குடும்பத்துடனும் அதிக நேரம் செலவழிப்பதையே விரும்புகிறேன். இவ்வாறு சதா கூறினார்.
Post a Comment