எங்கேயும் காதல் ஒரு பொதுவான காதல்கதை. எங்கேயும் பார்கக் கூடிய சுவாரஸ்யமான கதை. அது குறிப்பிட்ட யாருடைய காதல் கதையும் அல்ல, என்றார் இயக்குநரும் நடிகருமான பிரபு தேவா.
நயன்தாராவும் பிரபுதேவாவும் திருமணத்துக்கு தயார் ஆகிறார்கள். முதல் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்வதற்கான அனைத்து நடைமுறைகள், செய்ய வேண்டிய செட்டில்மெண்டுகளை முடித்து தயாராக உள்ளார் அவர். இன்னொரு பக்கம் அவர் இயக்கிய தமிழ்ப் படம் எங்கேயும் காதல் விரைவில் வெளியாகிறது. அடுத்து விஷால் நடிக்கும் படமான பிரபாகரனின் இறுதிக்கட்டப் பணிகள் நடக்கின்றன.
இந்தப் படம் முடிந்ததும் பிரபு தேவா - நயன்தாரா திருமணம் மும்பையில் நடக்கிறது.
இந்த நிலையில் எங்கேயும் காதல் ரிலீஸ் குறித்து பிரபு தேவா கூறுகையில், "காதல் என்பது உலகளவில் பொதுவான விஷயம். அதை உணராதவர்கள் எவரும் இருக்க முடியாது.
அதுதான் இந்தப் படத்துக்கு அடிப்படை. இது யாருடைய சொந்தக் கதையும் அல்ல. வாண்டட் என்ற ஆக்ஷன் படத்தை இந்தியில் எடுத்தேன். பலரது அனுபவத்தை வைத்துதான் அப்படத்தை எடுத்தேன் என்று சொல்ல முடியுமா? அல்லது அது என் சொந்தக் கதை ஆகிவிடுமா?
எங்கேயும் காதல் அழகான காதல் கதை. இளைஞர்களுக்கு ரொம்ப பிடிக்கும். ஜெயம் ரவியும், ஹன்சிகா மோத்வானியும் பொருத்தமான ஜோடியாக உள்ளனர். ஜாலியான படமாக இது இருக்கும். எனது தயாரிப்பாளர் என் கதை மீது நம்பிக்கை வைத்து படத்தை எடுக்க எனக்கு முழு சுதந்திரம் அளித்தார். அதை தவறாகப் பயன்படுத்தவில்லை", என்றார்.
English summary
Actor turned director Prabhu Deva ruled out the rumour on the plot of his forthcoming flick Engeyum Kadhal. He told that the film's story is not based on his love affair with Nayanthara.
Post a Comment