5/4/2011 10:21:30 AM
படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த மும்பை, இந்தியா கேட் பகுதியில் 3 வருடங்களுக்குப் பிறகு 'வந்தான் வென்றான்' படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் கண்ணன் கூறியதாவது: 'வந்தான் வென்றான்' படத்தின் கதையில் பெரும்பகுதி மும்பையில் நடக்கிறது. அதனால் மும்பையின் முக்கிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தாஜ் ஓட்டல் முன்பும், இந்தியா கேட் பகுதியிலும் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கவில்லை. கடுமையாகப் போராடி அனுமதி பெற்றோம். சண்டை காட்சிகள், குண்டு வெடிப்பு, விபத்து காட்சிகள் படமாக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதி கொடுத்தார்கள். பிறகு 4 நாட்கள் பாதுகாப்போடு படப்பிடிப்பை நடத்தினோம் ஜீவா, டாப்ஸி, சந்தானம் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டது. தீவிரவாத தாக்குதல் நடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு நாங்கள்தான் முதன் முதலில் படப்பிடிப்பு நடத்தினோம். இன்னும் இரு பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளது. இதற்காக படப்பிடிப்பு குழுவினர் சுவிட்சர்லாந்து செல்கிறோம்.
Post a Comment