7/21/2011 3:17:44 PM
‘டர்ட்டி பிக்சர்ஸ்’ இந்தி படம் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் வித்யா பாலன் நடிக்கிறார். மிலன் லுதாரியா இயக்குகிறார். ஹீரோ அஜய் தேவ¢கன். இப்படத்தில் சிகரெட் பழக்கத்துக்கு அடிமையானவராக வித்யா பாலன் நடிக்கிறார். இதற்காக தினமும் பத்து சிகரெட் வரை ஊதித் தள்ளுகிறாராம். இது பற்றி வித்யா கூறுகையில், “படத்தில் சில காட்சிகளில் ஓவர் கிளாமராக நடிக்க கேட்டார்கள். மறுத்துவிட்டேன். சிகரெட் பிடிக்க வேண்டும் என கூறியபோது மறுக்க முடியவில்லை. இது படத்துக்காக செய்வதுதான¢. ஆனால் எனது வீட்டில் இருப்பவர்கள், ‘அய்யோ… சிகரெட் பிடிக்கிறியா?’ என கவலைப்படுகிறார்கள். அவர்களை சமாதானப்படுத்துவதற்குள் ஒரு வழியாகிவிட்டேன்” என்றார்.
Post a Comment