7/21/2011 10:21:35 AM
'தெய்வ திருமகள் படத்தைபோல் மாற்றுத்திறனாளிகளிடம் அனைவரும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்' என திருச்சியில் நடிகர் விக்ரம் கூறினார். திருச்சியில் நடிகர் விக்ரம் நிருபர்களிடம் கூறியதாவது: தெய்வத்திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரம் சாராவின் நடிப்பு என் நடிப்பை விட அருமையாக இருந்தது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டரில், என்னை பாதிக்கும் விஷயங்களை கதையாக சித்தரித்து அவற்றை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என நினைத்து நடிப்பேன். எனக்கு நடிப்பு தொழில் அல்ல. அது ஒரு கலை. கதாபாத்திரம் தெரியாதபடி கேரக்டராகவே ஒன்றி நடிக்க வேண்டும் என்பது முயற்சி, குறிக்கோள். தெய்வத்திருமகள் படத்திற்காக மாற்றுதிறனாளிகள் பள்ளியில் உள்ளவர்களின் அங்க அசைவுகள், அவர்களின் நடை, பாவனை ஆகியவைகளை ஒரு மாதமாக கூர்ந்து கவனித்தேன். மாற்றுத்திறனாளிகளை மதித்து அவர்களிடம் நாம் அன்பாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் இந்த படத்தைப்போல் அனைவரும் வாழ்வில் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment