நாள்முழுக்க நின்றால் 1 லட்சம் மதிப்புள்ள டெலிவிஷன்! - சினேகா தொடங்கி வைத்த திட்டம்

|


ஒரு நாள் முழுக்க அதாவது 24 மணிநேரம் நிற்க வேண்டும்... காலைக் கூட மாற்றாமல் நின்ற இடத்தில் அப்படியே இருக்க வேண்டும். இப்படி நிற்பவர்களுக்கு பரிசாக ரூ 1 லட்சம் மதிப்புள்ள டிஜிட்டல் டிவி இலவசம்...!

-இப்படியொரு பரிசுத் திட்டத்தை ரிலையன்ஸ் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை சென்னையில் இன்று தொடங்கி வைத்தார் நடிகை சினேகா.

ரிலையன்ஸ் நிறுவனம் புதிதாக எலக்ட்ரானிக் பொருள் விற்பனை நிலையங்களை நாடு முழுக்க திறந்து வருகிறது. சென்னையிலும் இந்த கிளையைத் திறந்துள்ளது. அனைத்து முன்னணி நிறுவனங்களின் டிவி, ப்ரிட்ஜ், ஏசி உள்ளிட்ட அத்தனை எலெக்ட்ரானிக் தயாரிப்புகளும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் வகையில் இந்த கடையை அமைத்துள்ளது ரிலையன்ஸ்.

முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது இந்த நிறுவனம்.

சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள இந்த ரிலையன்ஸ் டிஜிட்டல் ஷோரூமை முன்னணி நடிகை சினேகா தொடங்கி வைத்தார்.

இந்தக் கடையை பிரபலப்படுத்தும் நோக்கில் ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு பரிசுத் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டப்படி, ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவன அலுவலக வாயிலில் 1 நாள் முழுக்க 24 மணி நேரமும் நின்றுகொண்டே இருப்பவருக்கு ரூ 1 லட்சம் மதிப்புள்ள நவீன டிஜிட்டல் டிவி பரிசாக வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தை நடிகை சினேகா முறைப்படி அறிவித்தார்.

இப்போதே பலரும், "1 நாள்தானே, நின்றுவிட்டுப் போகலாம்" என்று ரிலையன்ஸ் முன்னாள் திரள ஆரம்பித்துள்ளார்களாம்!
 

+ comments + 1 comments

Anonymous
7 August 2011 at 17:09

One of the worst promotional scheme. they may have to spend more than a lakh if stuck with health problem

Post a Comment