8/5/2011 2:56:01 PM
ஜெய், ஷரவானந்த், அஞ்சலி, அனன்யா நடிக்கும் 'எங்கேயும் எப்போதும்' படத்தை தயாரிக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இதன் பாடல் வெளியீட்டில் அவர் கூறியது: ஃபாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறேன். எவ்வளவு முடியுமோ அவ்வளவு செலவை மிச்சப்படுத்தி நிர்ணயித்த பட்ஜெட்டுக்குள் படத்தை முடித்திருக்கிறேன். எங்களிடம் சொன்ன தேதியிலிருந்து 4 நாட்களுக்கு முன்னதாகவே ஷூட்டிங்கை முடித்துக்கொடுத்தார் இயக்குனர் சரவணன். 2 ஹீரோயின்களை வைத்து படம் எடுத்தால் பிரச்னை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதை நான் இயக்கிய படத்திலே அனுபவித்தேன். அந்த பட ஷூட்டிங்கை ரயில் நிலையத்தில் நடத்தினேன். குறிப்பிட்ட காட்சியில் நடிக்க வேண்டிய ஹீரோயின் திடீரென்று வயிற்றுவலி என்று கூறி கேரவனுக்குள் சென்றுவிட்டார். அவர் ஏதோ கோபத்தில்தான் அப்படி செய்தார். அதன்பிறகு அவரே சமாதானம் அடைந்து வந்தார். ஆனால் காட்சியை படமாக்க நான் மறுத்துவிட்டேன். அதே நேரம், 'எங்கேயும் எப்போதும்' படத்தில் 2 ஹீரோயின் நடித்திருக்கிறார்கள். இவர்களுக்குள் பிரச்னை என்று இதுவரை கேள்விப்படவில்லை. இவ்வாறு முருகதாஸ் கூறினார். முருகதாஸ் இயக்கிய 'கஜினி' படத்தில் அசின், நயன்தாரா நடித்திருந்தனர். இப்படத்தில் ஒரு காட்சியில் கடத்தப்பட்ட சிறுமிகளை மீட்டு, ரயிலில் அசின் அழைத்து வருவது போல் காட்சி இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
Post a Comment