விரைவில் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

விரைவில் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி!

8/6/2011 11:31:48 AM

ரசிகர்களை விரைவில் ரஜினிகாந்த் சந்திப்பார் என்று தனுஷ் கூறினார். ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்துக்கு '3' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் தனுஷ் கூறும்போது, ''என் மனைவி ஐஸ்வர்யா இயக்குகிறார் என்பதற்காக, இதில் நடிக்கவில்லை. கதை பிடித்திருந்ததால் நடிக்கிறேன். மற்ற இயக்குனர்களிடம் நடிக்கும்போது எப்படி இருந்தேனோ, அப்படியே இப்போதும் இருக்கிறேன். என்னை இயக்கி நல்ல இயக்குனராக, தன்னை நிரூபித்த பின் ரஜினியை அவர் இயக்கலாம். ரஜினி இப்போது பூரண ஆரோக்கியத்துடன் இருக்கிறார். விரைவில் ரசிகர்களையும், பத்திரிகையாளர்களையும் சந்திப்பார்'' என்றார்.  ஐஸ்வர்யா கூறும்போது, ''இது தனுஷை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட கதை. '3' என்ற தலைப்பிலேயே கதையின் மையக்கருவும் அமைந்திருப்பதால் அதுபற்றி விளக்கமாக கூற முடியாது. இதுவரை பார்க்காத இன்னொரு தனுஷை இதில் பார்க்கலாம். ஏ.ஆர்.ரகுமானிடம் பணியாற்றிய அனிருத் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்'' என்றார். பேட்டியின்போது ஹீரோயின் அமலா பால், தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜா உடன் இருந்தனர்.

 

Post a Comment