8/5/2011 2:59:33 PM
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
சம்பத்தான வில்லன் நடிகரு, டைரக்டருங்க எங்கே போனாலும் நிழல்போல துரத்துறாராம்... துரத்துறாராம்... இயக்கங்களும் எதுவும் சொல்ல முடியாம அவரோட தொல்லையை பொறுத்துக்கிறாங்களாம். பட வாய்ப்புகளை கேட்ச் செய்வவே இந்த துரத்தலாம்... துரத்தலாம்... இதே டெக்னிக்கை தயாரிப்புங்ககிட்டேயும் நடிகரு யூஸ் பண்ணறாராம்... பண்ணாறாராம்...
பெண் டைரக்டரு எடுத்த திருநங்கை நடிச்ச படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடல. படத்துகாக தயாரிப்பு கடன் வாங்கியிருந்தாரு. அதை வசூலிக்க கடன்காரங்க போனப்போ, செக் போட்டுத் தந்தாராம்... தந்தாராம்... ஆனா அதை பேங்க்ல போட்டதும் பணம் இல்லைன்னு திரும்பிடுச்சாம்... திரும்பிடுச்சாம்... மறுபடியும் பணத்தை கேட்டா, Ôபடம் லாஸ் ஆயிடுச்சி. கொடுக்க வேண்டிய தொகையை பாதியா குறைச்சிக்கங்கÕன்னு தயாரிப்பு கெஞ்சுறாராம்... கெஞ்சுறாராம்...
சமீபத்துல சினிமா விழாவுக்கு வந்தாரு பிரகாச ஹீரோ. அவரை மேடைக்கு அழைக்க தொகுப்பாளர், ஹீரோவை பற்றி ஓவர் பில்டப் தர ஆரம்பிச்சாராம்... ஆரம்பிச்சாராம்... மேடைக்கு வந்த நடிகரு, இப்படியெல்லாம் புகழ வேணாம்னு தொகுப்பாளரை கேட்டுக்கிட்டாரு. ஹீரோவை பேச அழைக்கும்போது திரும்ப பில்டப் கொடுக்க ஆரம்பிச்சாராம். உர்ரான ஹீரோ, தொகுப்பாளரை கடிந்து கொண்டாராம்... கொண்டாராம்... தொகுப்பாளர் பதறிட்டாராம்... பதறிட்டாராம்...
Post a Comment