ஐஸ்வர்யா ரஜினி புகார் எதிரொலி: பேஸ்புக்கில் அவர் பெயரிலிருந்து போலிக் கணக்கு நீக்கம்

|


சென்னை: பேஸ்புக்கில் தன் பெயரில் வேறு யாரோ தகவல்களை அப்டேட் செய்வதாக ரஜினியின் மகள் ஐஸ்வர்யா புகார் தெரிவித்ததால், உடனடியாக அந்தப்பக்கத்தையே அகற்றிவிட்டனர்.

ரஜினி மகளும் தனுஷ் மனைவியுமான ஐஸ்வர்யா இன்டர்நெட்டில் தனது பெயரில் மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் இன்டர்நெட்டில் பேஸ்புக்கில் இல்லை. ஆனால் யாரோ எனது பெயரை போலியாக பேஸ்புக்கில் உருவாக்கியுள்ளார் என் சம்பந்தப்பட்ட செய்திகளையும் அதில் போட்டு வைத்துள்ளார். நான் இயக்கும் படம் பற்றிய தகவல்கள் எனது தந்தை ரஜினி, கணவர் தனுஷ் பற்றிய விவரங்களையும் அதில் சேர்த்துள்ளார்.

இது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த பேஸ்புக்கை உண்மை என நம்பி எனது நண்பர்கள் உறவினர்கள் அதில் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். ரஜினி, மற்றும் தனுசுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவர்களும் போலி பேஸ் புக்கில் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். இது பெரிய மோசடித்தனம் ஆகும்," என்று கூறியிருந்தார்.

சைபர் கிரைம் போலீசில் இது பற்றி புகார் அளிக்கவும் ஐஸ்வர்யா முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், ஐஸ்வர்யா குறிப்பிட்டிருந்த பெயரில் பேஸ்புக்கிலிருந்த கணக்கு அழிக்கப்பட்டுள்ளது. இப்போது ஐஸ்வர்யா தனுஷ் எனும் பெயரில் ரசிகர்கள் சிலர் பேஸ்புக்கில் உள்ளனர்.
 

Post a Comment