ரஜினி குணம் அடைந்ததற்காக சபரிமலையில் தனுஷ் தரிசனம்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ரஜினி குணம் அடைந்ததற்காக சபரிமலையில் தனுஷ் தரிசனம்

8/6/2011 11:40:45 AM

சபரி மலை யில் நடி கர் தனுஷ் தரிசனம் செய்தார். பிரபல நடிகர் தனுஷ் முதன்முதலாக சபரிமலை சென்றார். இதற்காக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து காரில் புறப்பட்ட இவர், கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரியில் பாடகர் ஏசுதாசின் நெருங்கிய நண்பரான பாலச்சந்திர தாசின் வீட்டிற்கு சென்றார். அவருடன் பிரபல பின்னணி பாடகர் விஜய் ஏசுதாசும் சென்றார். அங்கு இருமுடி கட்டுக்கட்டி இருவரும் நேற்று முன்தினம் இரவே காரில் சபரிமலை புறப்பட்டனர். இரவு 10 மணியளவில் சன்னிதானம்  சென்ற அவர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் சென்னை திரும்பினார். மாமனார் ரஜினிகாந்த் உடல் நலம் தேறியதற்காகவும், தனக்கு தேசிய விருது கிடைத்ததற்காகவும் சபரிமலைக்கு தனுஷ் சென்றதாக கூறப்படுகிறது.

 

Post a Comment