சபரிமலையில் தனுஷ்... ரஜினிக்காக பிரார்த்தனையா?

|


சபரிமலை: சபரிமலைக்கு திடீர் விஜயம் நடத்திய நடிகர் தனுஷ், மாமாவும் சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் உடல்நலம் தேறியதற்காக, தனது வேண்டுதலை முடித்ததாக தெரிகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலை கடந்த மாதம் திடீரென மோசமாகி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை முடித்து நாடு திரும்பினார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இயக்குனரும், சகோதரருமான செல்வராகவன் படத்தில் நடிப்பது குறித்த பணிகளில் ஈடுபட்ட தனுஷ், திடீரென சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்தார்.

சென்னையில் இருந்து காரில் புறப்பட்ட நடிகர் தனுஷ், கேரள மாநிலம், கோட்டத்திற்கு சென்றார். சங்கனாச்சேரியில் உள்ள பாடகர் யேசுதாஸின் நண்பர் ஒருவர் வீட்டில் தங்கினார். பின் அங்கிருந்து, பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் ஏசுதாசுடன் கொச்சினுக்கு புறப்பட்டு சென்றார்.

பின்னர் இருமுடி கட்டுக் கட்டிய இருவரும், சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர். இரவு 10 மணிக்கு சன்னிதானத்தை அடைந்த தனுஷ், சுவாமி ஐயப்பனை தரிசித்தார். அதன்பின், கார் மூலம் சென்னை திரும்பினார்.

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் தேறியதற்காகவும், தேசிய விருது தனக்கு கிடைத்ததற்காகவும், இந்த திடீர் ஐயப்ப தரிசனம் செய்ததாகத் தெரிகிறது. ஆனால், தான் சபரிமலைக்கு சென்றது குறித்து கேட்டதற்கு, காரணத்தை கூற நடிகர் தனுஷ் மறுத்துவிட்டார்.
 

Post a Comment