ஒரு பாடலுக்கு ஆடும் தேவி ஸ்ரீ!
8/9/2011 11:56:09 AM
விஷாலை வைத்து இயக்கும் வெடி படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்தை ஒரு பாடலுக்கு ஆட வைத்திருக்கிறாராம். வெடியின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்து வருகிறது. தெலுங்கு சௌகரியம் படத்தின் ரீமேக்தான் வெடி. ரீமேக் செய்வது பிரபுதேவாவுக்கு சௌகரியம். தனது படங்களில் சின்னச் சின்ன சில்மிஷங்கள் செய்யும் பிரபுதேவா இந்தப் படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்தை ஒரு பாடலுக்கு ஆட வைத்துள்ளாராம். அதற்காக படத்தின் இசை தேவி ஸ்ரீ பிரசாத் என்று நினைத்துவிடாதீர்கள். அது வேறு ஆள். தேவி ஸ்ரீ பிரசாத்துடன் ஆடியிருப்பது சமீரா ரெட்டியாம்.
Post a Comment