சென்னை: திரைப்பட தயாரிப்பாளரும் பிஆர்ஓவுமான கிளாமர் கிருஷ்ணமூர்த்தி சென்னையில் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74.
வி.சி. குகநாதன் இயக்கிய மஞ்சள் முகமே என்ற படத்தை தயாரித்தவர் கிளாமர் கிருஷ்ணமூர்த்தி.
நான் ஆணையிட்டால் படத்தில் எம்.ஜி.ஆரால் மக்கள் தொடர்பாளராக அறிமுகமாகி சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட பலருக்கு பி.ஆர்.ஓ.வாக பணியாற்றி உள்ளார்.
கிளாமர் சினி நியூஸ் என்ற மாத சினிமா பத்திரிகையையும், கிளாமர் சினிகைடு என்ற நட்சத்திரங்களின் டைரியையும் வெளியிட்டு நடத்தி வந்தார். மேலும் முன்னாள் பி.ஆர்.ஓ., யூனியன் தலைவராகவும், தற்போது பி.ஆர்.ஓ., யூனியன் கவுரவ தலைவராகவும் இருந்து வந்தார்.
இவருக்கு கஜலட்சுமி என்ற மனைவியும் கிளாமர் சத்யா என்ற மகனும், விஜயகுமாரி, பிரேமா என்ற மகள்களும் உள்ளனர். இப்போதைய பிஆர்ஓ சங்கத் தலைவரும், பிரபல தயாரிப்பாளருமான விஜயமுரளி இவரது மருமகன் ஆவார்.
அவரது இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் சென்னை கண்ணம்மா பேட்டையில் நடந்தது. திரையுலகப் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Post a Comment