8/9/2011 3:17:59 PM
'வந்தான் வென்றான்' பட இயக்குனர் கண்ணன் கூறியது: வேலை விஷயமாக மும்பை செல்லும் ஜீவாவுக்கும், வெளிநாட்டில் படித்து மும்பை வரும் டாப்ஸிக்கும் காதல் மலர்கிறது. இந்த காதல் ஜெயிக்கிறதா? ஜீவா எண்ணிச் செல்லும் வேலை முடிகிறதா? என்பதே கதை. டாப்ஸி ஏற்கனவே 'ஆடுகளம்Õ படத்தில் நடித்ததால் அவரால் தமிழ் வசனங்களை எளிதாக புரிந்துகொள்ள முடிந்தது. கண்ணை உருட்டிக்கொண்டு கடைசிவரை ரத்தம் சொட்டச் சொட்ட ஹீரோ நடிக்கும் ஆக்ஷன் கதைகளில் எனக்கு உடன்பாடில்லை. வாழ்க்கையில் அதிர்ச்சி, சந்தோஷம் என எல்லாம் கலந்து வரும். அதுபோல் வாழ்க்கையை யொட்டி வரும் படங்கள்தான் எனது பாணி. 'ஜெயம் கொண்டான்' ஒரு ஜனரஞ்சக படமாக அமைந்திருந்ததை எல்லோரும் பாராட்டினர். நேரடி படங்கள் இயக்குவதைவிட ரீமேக் செய்வது கடினம். இதை ஒரிஜினல் படத்தோட ஒப்பிட்டு பார்ப்பார்கள். 'தாரே ஜமீன் பர்' போன்ற நல்ல படங்களை ரீமேக் செய்வதில் தவறில்லை. அடுத்து அறிவியல் சம்பந்தப்பட்ட கதையை இயக்குகிறேன். அதற்கான ஸ்கிரிப்ட் தயாராகிறது.
Post a Comment