லிம்கா விளம்பரத்தில் நடிக்க கரீனாவுக்கு ரூ 2.5 கோடி சம்பளம்!

|


கோக் நிறுவனத்தின் லிம்கா குளிர்பான விளம்பரத்தில் நடிக்க நடிகை கரீனா கபூருக்கு ரூ 2.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் விளம்பரங்களில் நடிக்க நடிகைகள் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

குறிப்பாக கத்ரீனா கைப் மற்றும் கரீனா கபூருக்கு இடையே இதில் பெரும் போட்டியே நடக்கிறது.

சமீபத்தில் கத்ரீனா விளம்பர அம்பாசிடராக உள்ள மாஸா குளிர்பானத்தை கோக் நிறுவனம், கரீனா கபூருக்கு ரூ 2.5 கோடி கொடுத்து தங்களின் இன்னொரு பிராண்டான லிம்காவுக்கு விளம்பரம் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

அசின் நடித்தா பான்டா விளம்பரமும், கத்ரினா கைஃப் நடித்த மாஸா விளம்பரமும் ஏற்கெனவே படுபிரபலம் என்பதால், 'இந்த விளம்பரங்களை விட சுவாரஸ்யமா நான் நடிக்கும் விளம்பரப் படத்தை எடுத்துத் தரணும்' என கண்டிஷன் போட்டுதான் ஒப்பந்தத்தில் கையெழுத்தே போட்டாராம் கத்ரீனா!

இத்துடன் அவர் 16 விளம்பரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சினிமாவிலும் அவருக்கு ஏக மவுசு. சமீபத்தில் மதுர் பண்டார்கரின் ஹீரோயின் படத்தில் நடிப்பதற்காக அவருக்கு ரூ 8 கோடி சம்பளம் தர தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டது நினைவிருக்கலாம்.
 

Post a Comment