2 லட்சம் பிரதிகள் விற்ற ‘நீயா நானா’ கோபிநாத்தின் புத்தகம்!

|

Neeya Naana Gopinath Please Do Not Bye This Book
விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் எழுதிய ‘ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க!’ என்ற புத்தகம் விற்பனையில் சாதனை படைத்து, 2 லட்சம் பிரதிகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

ஊடகத்துறையில் கோபிநாத் என்ற பெயரை விட நீயா நானா கோபிநாத் என்ற பெயர்தான் பிரபலம். அந்த அளவிற்கு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது அந்த நிகழ்ச்சி. ஒரு டாக் ஷோ எப்படி இருக்க வேண்டும் என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ளும் வகையில் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறார்.

தான் நிகழ்ச்சி நடத்துநர் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளர் என்பதையும் தனது நூலின் வாயிலாக நிரூபித்துள்ளார் கோபிநாத். அவர் தனது அனுபவங்களையும், தான் சந்தித்த மனிதர்களையும் தனது எழுத்துக்களில் வடித்துள்ளார்.

2007ம் ஆண்டு தனது முதல் புத்தகமான ‘ தெருவெல்லாம் தேவதைகள்’ என்ற நூலை எழுதினார். அதைத் தொடர்ந்து எழுதிய ‘ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க !’ என்ற நூல் வாசகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலில் பதிப்பிக்கப்பட்டது.

தற்போது அந்த நூல் 16வது முறையாக பதிப்பிக்கப்பட்டு 2 லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. அந்த புத்தகம் அனைவரும் கவர முதல் காரணம் அதன் தலைப்பே அதை வாங்கத் தூண்டுவதாக இருக்கிறது. இந்தப் புத்தகத்தை வாசித்தால் மகிழ்ச்சியும், தன்னம்பிக்கையும் ஏற்படுவதாக கூறுகின்றனர் வாசகர்கள்.
 

Post a Comment