தொடர்ந்து எட்டு மணி நேரம் டப்பிங் பேசி பழம்பெரும் பாடகர் கண்டசாலா மகன் ரத்னகுமார் சாதனை நிகழ்த்தினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: என் தந்தை கண்டசாலா பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் பாடியவர். நான் 'காஞ்சி காமாட்சி' என்ற படம் மூலம் டப்பிங் கலைஞரானேன். இந்தி, சமஸ்கிருதம் மற்றும் தென்னிந்திய மொழிகளில் 1076 படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளேன். 'ராமாயணம்' தொடரில் ராமனுக்கும், 'ஸ்ரீகிருஷ்ணா' தொடரில் கிருஷ்ணனுக்கும் வருட கணக்கில் டப்பிங் பேசியது மறக்க முடியாத அனுபவம். பல விருதுகளை பெற்றிருந்தாலும் டப்பிங் கலையில் சாதனை படைக்க ஆசை இருந்தது. அதை நிறைவேற்ற மே 4-ம் தேதி காலை 10 மணி முதல் தொடர்ந்து 8 மணிநேரம் டப்பிங் பேசினேன். இந்த சாதனை இந்திய, ஆசிய, தமிழ்நாடு மற்றும் உலக அமேஸிங் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு ரத்னகுமார் கூறினார்.
Post a Comment