சிகரம் பிலிம் பேக்டரி சார்பில் கே.ஆர்.எஸ்.கே.ஜெயகுமார் கதை எழுதி தயாரிக்கும் படம், 'மவுனமான நேரம்'. ரிஷிகுமார், கிரிஷ், ஜெ.பிரகாஷ், டெய்சி ஷா, மீத்தா உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தை இயக்கும் மோகன்ராஜ் கூறியதாவது: சாப்ட்வேர் என்ஜினீயர்கள் சிலர் அடர்ந்த காடுகளுக்கு ஜாலியாக செல்லும்போது சந்திக்கும் பிரச்னைகள்தான் கதை. திகில் படங்களுக்கான இலக்கணங்களை உடைக்கும் விதமாக இதை உருவாக்கியுள்ளோம். திகில் படம் என்றால், இருட்டை மையமாக வைத்தே கதை சொல்வார்கள். இதில் 99 சதவீதம் பகலிலேயே கதை நடக்கும். மறையூர் அருவியில் டெய்சி ஷா நடித்த காட்சியை படமாக்கிக்கொண்டிருந்தோம். திடீரென்று எந்த அறிவிப்பும் இல்லாமல் அணையில் தண்ணீரை திறந்துவிட்டனர். சில நிமிடங்களில் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நாங்கள் சிதறி ஓடினோம். டெய்சி ஷா மட்டும் தண்ணீரில் சிக்கி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். படப்பிடிப்புக் குழுவினர் அவரை மீட்டனர். படப்பிடிப்புக் கருவிகளுக்கு எந்த சேதாரமும் இல்லாமல் பாதுகாப்பான இடத்துக்கு வந்தோம்.
Post a Comment