திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.விஜயகுமார் தயாரிக்கும் படம் 'பீட்சா'. விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயண் இசை. கோபி அமர்நாத் ஒளிப்பதிவு. கார்த்திக் சுப்பாராஜ் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: நான் சாப்ட்வேர் என்ஜினீயராக இருந்தாலும் சினிமா மீதான காதலால் இந்தத் துறைக்கு வந்தேன். பெங்களூரில் இயக்கம் கற்றேன். பல குறும்படங்களை இயக்கினேன். இப்போது இந்தப் படத்தை இயக்குகிறேன். பீட்சா சப்ளை செய்யும் ஹீரோவுக்கும், கல்லூரியில் படிக்கும் ஹீரோயினுக்கும் காதல். கவிதையாக துவங்கும் இந்த காதலுக்குள், திகில், மர்மம் நுழைந்து ரொமான்டிக் த்ரில்லராக மாறும். இதில் பீட்சாவின் பங்கும் இருக்கும். அது என்ன என்பதை சுவையாகச் சொல்கிறோம். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.
Post a Comment