கேப்டன் டிவியில் இருந்து புதிதாக ஒரு சேனல் ஆகஸ்ட் முதல் தொடங்கப்பட உள்ளது. 24 மணிநேர செய்திகளை ஒளிபரப்ப உள்ளதாக கேப்டன் டிவி நிர்வாகிகளில் ஒருவரான எல்.கே.சுதீஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,
தேமுதிக தலைவர் திரு. விஜயகாந்திற்கு சொந்தமான கேப்டன் மீடியா நிறுவனத்தின் 2வது சேனல், அடுத்த இரண்டு மாதங்களில் அதன் முதல் 24 மணி நேர செய்தி சேனலாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது
கேப்டன் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆகஸ்ட் 29 முதல் தனது 24 மணி நேர செய்தி சேனல் "கேப்டன் செய்திகள்" அதன் ஒளிபரப்பை துவக்க உள்ளது என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த சேனல் நடுநிலையான மற்றும் தரமான செய்திகளை ஒளிபரப்பும், என்றும் அவர் கூறினார்.
"கேப்டன்", கேப்டன் மீடியாவின் நிலையான முதல் 24 மணி நேர தொலைக்காட்சி சேனல் தனது மூன்றாம் ஆண்டு பயணத்தை தொடங்கியுள்ளது எனவும் திரு.எல்.கே. சுதீஷ் கூறினார்.
Post a Comment