சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம், சென்னையில் ஜுலை 7-ந் தேதி நடக்கிறது. அன்று சில முக்கிய முடிவுகளை அறிவிக்கப் போவதாக நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சமீபத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில், ஏற்கனவே இரண்டு முறை சங்கத்தின் தலைவராக இருக்கும் சரத்குமார் மூன்றாவது முறையாக, நடிகர் சங்க தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணைத்தலைவர்களாக விஜயகுமார், கே.என்.காளை, பொதுச் செயலாளராக ராதாரவி, பொருளாளராக வாகை சந்திரசேகர் ஆகியோரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் உடனடியாக பதவி ஏற்றுக்கொண்டார்கள்.
தேர்தலுக்குப்பின், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், ஜுலை 7-ந் தேதி மாலை 6 மணிக்கு, சென்னை தியாகராயநகரில் உள்ள ஜெர்மன் அரங்கில் நடக்கிறது.
இந்த கூட்டத்தில், சங்கம் தொடர்பான மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Post a Comment