கவர்ச்சியும், கசமுசாவாகவும் போகும் வீணா மாலிக்கும், 3வது காதலும்...!

|

Veena Malik 3d Love Life

வீணா மாலிக் என்றாலே கவர்ச்சி, கசமுசா என்றாகி விட்டது. இப்போது அவரது காதலும் கூட அப்படித்தான் கண்டக்க முண்டக்க போய்க் கொண்டிருக்கிறது.

பாகிஸ்தானிலிருந்து வந்து இந்தியாவை கலக்கிக் கொண்டிருக்கிறார் வீணா மாலிக் - தவறான காரணங்களுக்கா. இதை விட யாரும் கவர்ச்சி காட்ட முடியாது என்று கூறும் அளவுக்கு எல்லையில்லாமல் போய்க் கொண்டிருக்கிறார்.

படங்களில் கவர்ச்சி காட்டுவதைப் போலவே நிஜத்திலும் பல்வேறு சச்சரவுகள், சலசலப்புகளுடன் போய்க் கொண்டிருக்கிறது அவரது வாழ்க்கை. ஆரம்பத்தில் பாகிஸ்தான் காதலர் முகம்மது ஆசிப்புடன் சுற்றிக் கொண்டிருந்தார். பிறகு அவரை விட்டு விட்டு இந்தியாவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அப்போது அங்கு தங்கியிருந்த அஷ்மித் படேலுடன் படு நெருக்கமாக பழகினார். பிக் பாஸ் வீட்டுக்குள் 'அதைத் தவிர' இருவருக்கும் இடையே மற்ற எல்லா வகையான நெருக்கமும் இருந்தது.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு படேலைத்தூக்கிப் போட்டு விட்டார். இப்போது இயக்குநர் ஹேமந்த் மதுகருடன் படு நெருக்கமாக உலா வருகிறார். இருவருக்கும் இடையிலான காதல், மகா நெருக்கமாக, டைட்டாகி விட்டதாம். அடிக்கடி ஜோடி போட்டுக்கொண்டு எங்கெங்கோ சுற்றுகிறார்களாம்.

ஏற்கனவே இருவரும் நெருக்கமாக இருப்பதைப் போன்ற புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. இப்போது இன்னொரு செட் படத்தை வெளியிட்டுள்ளனர் - இப்படங்களை வெளியிடுவதும் கூட வீணா மாலிக்தான் போலிருக்கிறது - இப்படத்திலும் இருவரும் நெருக்கமாக, அன்னியோன்யமாக காணப்படுகின்றனர்.

மும்பை 125 கிலோமீட்டர் என்ற படத்தை இயக்கி வருபவர்தான் இந்த மதுகர். இவரும், வீணாவும் சேர்ந்து இப்போது காதல் வீணையை மீட்டிக் கொண்டிருக்கிந்றனர். படப்பிடிப்பின்போதே இருவருக்கும் இடையே பிணைப்பு ஏற்பட்டு விட்டதாம்.

தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களும் கூட இருவருக்கும் இடையிலான நெருக்கத்தை, டைட்னஸை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக உள்ளது. ஒரு படத்தில் வீணா பிரா கடையில் பிராக்களை பார்ப்பதையும், அதை வாங்க மதுகர் உதவுவது போலவும் உள்ளது.

இதுக்கு மேல என்னத்தைச் சொல்ல...

 

Post a Comment