29ல் துபாயில் பாடகர் மனோவின் கோடையில் இன்னிசை மழை

|

Mano S Kodaiyil Innisai Mazhai Dubai On June 29

துபாய்: துபாயில் பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் இன்னிசை மழை நிகழ்ச்சி வரும் 29ம் தேதி நடைபெறுகிறது.

துபாய் முத்த‌மிழ்ச் ச‌ங்க‌ம் ம‌ற்றும் த‌மிழ்நாடு இன்ஜினிய‌ர்ஸ் வீட்டுவ‌ச‌தி ந‌ல அற‌க்க‌ட்ட‌ளை ஆகியவை இணைந்து நடத்தும் ம‌னோவின் கோடையில் இன்னிசை மழை நிகழ்ச்சி 29.06.2012 அன்று மாலை 4.00 ம‌ணி முத‌ல் இரவு 12 மணி வரை அல் கிஸ‌ஸ் துபாய் ம‌க‌ளிர் க‌ல்லூரியில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

சிற‌ப்பு விருந்தின‌ராக‌ நடிகர் நிழ‌ல்க‌ள் ர‌வி கலந்து கொள்கிறார். ரோபோ ச‌ங்க‌ர் ம‌ற்றும் அர்விந்த் ஆகியோரின் மிமிக்ரி நிக‌ழ்ச்சியும் ந‌டைபெற‌ இருக்கிற‌து. நிக‌ழ்ச்சியை விஜ‌ய் டிவி புக‌ழ் திவ்ய‌த‌ர்ஷினி தொகுத்து வ‌ழ‌ங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியின்போது துபாய் முத்த‌மிழ்ச் ச‌ங்க‌த்தின் இணைய‌த‌ள‌ம் அறிமுக‌ நிக‌ழ்ச்சியும் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

 

Post a Comment