39 வயதில் பிளேபாய்க்கு நிர்வாண போஸ் கொடுத்த அமெரிக்க நடிகை!

|

Jenny Mccarthy Poses Playboy At Age 39

அமெரிக்க நடிகை, மாடல் அழகியான ஜென்னி ஆன் மெக்கார்த்தி, தனது 39வது வயதில் பிளேபாய் பத்திரிகைக்கு நிர்வாண போஸ் கொடுத்து அசரடித்துள்ளார். ஜூலை-ஆகஸ்ட் மாத இதழின் அட்டைப் படத்தில் அவரது கவர்ச்சி போஸ் இடம் பெறுகிறது. இந்த இதழ் ஜூன் 29ம் தேதி விற்பனைக்கு வருகிறது.

பிளேபாய் முன்பு நி்ர்வாணமாக நிற்பது ஜென்னிக்கு புதிதல்ல. ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கு முன்பு அவர் நிர்வாண போஸ் கொடுத்தவர்தான்.

இதுகுறித்து மெக்கார்த்தி கூறுகையில், இதை பெருமையாக நினைக்கிறேன். எனது படம் அழகாக வந்திருக்கிறது. கிளாசிக்காக இருக்கிறது. மிகவும் கம்பீரமாக தெரிகிறேன் என்றார் சிரித்தபடி.

1993ம் ஆண்டு பிளேபாய் பத்திரிக்கைக்கு முதல் முறையாக ஜென்னி நிர்வாண போஸ் கொடுத்தபோது அவருக்கு 20 ஆயிரம் டாலர் ஊதியமாக கொடுத்தனர். ஆனால் இந்த முறை பெரிய தொகையைக் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

40 வயசுக்கு முன்பு எனது நிர்வாணத்தை அழகாக வெளிப்படுத்த கிடைத்த இந்த வாய்ப்பு சந்தோஷம் தருவதாக கூறும் ஜென்னி, 20 வயதுப் பெண்களை விட 40 வயதுப் பெண்கள்தான் உண்மையிலேயே கவர்ச்சி மிக்கவர்கள், அழகானவர்கள் என்றும் கூறுகிறார். கூடவே, வயதாக ஆக எனக்கு இளமையும் கூடுகிறு என்றும் தனது அழகு குறித்து பெருமைப்படுகிறார்.

 

Post a Comment