தனது அடுத்த படத்தில் மிக ஸ்லிம்மாகத் தோன்ற வேண்டும் என்பதற்காக தினமும் மணி நேரம் கடும் உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார் நடிகர் அஜீத்.
விஷ்ணுவர்த்தன் இயக்க நயன்தாராம ஜோடியாக நடிக்கும் இந்தப் படம் இந்தியில் வெளியான ரேஸ் படத்தின் ரீமேக் என்கிறார்கள்.
படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. படப்பிடிப்பு கடந்த 18-ந்தேதி பெங்களூரில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஆர்யாவும் நடிக்கிறார். நாயகிகளாக நயன்தாரா, டாப்ஸி நடிக்கின்றனர்.
இந்த படத்தில் அஜீத்தை மங்காத்தாபோல் இல்லாமல் மிகவும் இளமையாக காட்டப் போகிறாராம் விஷ்ணுவர்த்தன். இதற்காக தலைமுடி காஸ்ட்யூம் என எல்லாவற்றையும் மாற்றுகிறார்கள்.
அத்துடன் உடல் எடையை குறைக்கும்படியும் கேட்டுக் கொண்டாராம். இதனை ஏற்று அஜீத் கடந்த 7 நாட்களாக ஜிம்முக்கு செல்கிறார். தினமும் 5 மணி நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து விஷ்ணுவர்த்தன் கூறும்போது, தீவிர உடற்பயிற்சி செய்கிறார் அஜீத். அவரது உருவம் இப்போது நம்ப முடியாத அளவுக்கு மாறியிருக்கிறது,” என்றார்.
+ comments + 1 comments
only for few days manghatha,after then it will come to the normal and original size .
Post a Comment