பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலிக்கு அவரது நீண்டகால பாய்பிரண்ட் நடிகர் பிராட் பிட் போட்ட ரூ.1.28 கோடி மதிப்புள்ள நிச்சயதார்த்த மோதிரம் பிடிக்கவில்லையாம்.
ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டும் (48), நடிகை ஏஞ்சலினா ஜூலியும் (36) கடந்த 7 ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்ளாமலேயே குடித்தனம் நடத்தி வருகின்றனர்.
கல்யாணம் செய்து கொள்ளாமலேயே குடும்பம் நடத்தி ஒரு பெண் குழந்தை, இரட்டைக் குழந்தைகள் என்று 3 குழந்தைகளை பெற்றுள்ளனர். இது போக, மேலும் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் ஜூலி மறுபடியும் கர்ப்பமாக உள்ளார். அதுவும் இரட்டைக் குழந்தைகள் என்று கூறப்படுகிறது.
இப்படி குழந்தைகள் வதவெதன்று அதிகரித்துக் கொண்டு போன நிலையில், அட என்னங்கப்பா நீங்க பேசாம கல்யாணத்தைப் பண்ணிக்குங்க என்று பிராடையும், ஜூலியையும் அவர்களது குழந்தைகள் நச்சரிக்க ஆரம்பித்தனர். இதையடுத்து தான் அவர்கள் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளனர்.
நிச்சயதார்த்த மோதிரத்தை பிராட் பிட்டே டிசைன் செய்துள்ளார். எமரால்ட், வைரம் பதித்த அந்த மோதிரத்தின் விலை ரூ. 1,28,25,725 ஆகும். ஆனால் அவ்வளவு பணம் செலவழித்தது வீணாகிப் போய்விட்டதே. ஏஞ்சலினா ஜூலிக்கு நிச்சதார்த்த மோதிரத்தை கண்டாலே பிடிக்கவில்லையாம்.
ஜூலிக்கு எமரால்டு தான் பிடிக்கும். ஆனால் பிட்டோ வைர மோதிரத்தை போட்டுள்ளார். இது தான் அவர் ஜூலியைப் புரிந்து கொண்ட லட்சணம் என்று அவர்களுக்கு நெருங்கிய ஒருவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதானே, புகையைப் போட்டு பொங்க விடத்தான் சுற்றிலும் ஆட்கள் இருப்பார்களே...!
Post a Comment