ரியாலிட்டி ஷோவில் நடிகையின் உள்ளாடை தெரிந்ததால் 'ஷேம் ஷேம்'!

|

Bethenny Frankel Flashes Audience On Talk Show

பிரபல சி.என்.என் தொகுப்பாளர் ஆண்டர்சன் கூப்பரின் டாக் ஷோவில் பங்கேற்ற டிவி நடிகை பெத்தென்னி பிராங்கெல், அவசரப்பட்டு செய்த காரியத்தால் ஷேம் ஷேம் ஆகி, தர்மசங்கடமாகி விட்டது.

லைவ் ஷோ நிகழ்ச்சி சுவாரஸ்யமாக நடைபெற்றுக்கொண்டிருந்த போது கூப்பர், பெத்தென்னி இடையே யார் அதிக புஷ் அப் (Push up) செய்வது என்ற போட்டி ஏற்பட்டது. அப்போது உணர்ச்சிவசப்பட்ட நடிகை தரையில் வேகமாக குப்புற பாய்ந்தார்.

பாய்ந்த வேகத்தில் அவரது பாவாடை மேல் கிளம்ப, அவரது உள்ளாடை காமிராவில் பதிவாகி உலகெங்கும் ஒளிபரப்பானது.

ஒருகணம் திகைத்து போன நடிகை, சுற்றியிருந்த பார்வையாளர்களை பார்த்து "ஏதாவது பார்த்தீங்களா"? என்ன தெரிந்தது? என்று கேட்டார்.

அவர்களும் விடாமல், ஆமாமா, 'பிங்க்' கலரில் பார்த்தோம் என்று கத்தி அரங்கையே அதிரவைத்தனர். நடிகைக்கு வெட்கக்கேடாகிப் போனதுதான் மிச்சம்.

இனியாவது பார்த்துப் பாய்ங்கம்மா...!

 

Post a Comment