மெட்டி ஒலியை இல்லத்தரசிகளிடம் ரசிக்க வைத்த திருமுருகன் இப்பொழுது வீடுகள் தோறும் நாதஸ்வர ஓசையை கேட்கவைத்திருக்கிறார். திரு பிக்சர்ஸ் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என பன்முகத்திறமை படைத்தவர். ‘நாதஸ்வரம்' படப்பிடிப்பிற்காக காரைக்குடி பகுதியை சுற்றிக்கொண்டிருக்கும் திருமுருகன் தனது சின்னத்திரை பயணம் பற்றி கூறியுள்ளார்.
மெட்டி ஒலிக்கு பிறகு எம் மகன், முணியாண்டி விலங்கியல் மூண்றாமாண்டு படங்களை இயக்கினேன். ரெண்டு படங்களுமே எனக்கு திருப்தி கொடுத்த படங்கள்தான். அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் ரெடி இருந்தாலும் நாதஸ்வரத்தில் இயக்கம், தயாரிப்புன்னு இரட்டை குதிரை சவாரி செய்யவேண்டியிருக்கிறது. இப்பொழுது கார்த்திகை பெண்கள் என்ற நெடுந்தொடரையும் தயாரிப்பதால் ரொம்ப பிஸி.
நாதஸ்வரம் கதை எங்களை நாடோடிகள் மாதிரி ஆக்கிடுச்சு. காரைக்குடியில்தான் பெரும்பாலான ஷூட்டிங் என்றாலும், பேராவூரணி, திருப்புலானி உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் சென்று அங்கேயே தங்கியிருந்து ஷூட்டிங் நடத்துகிறோம். பல ஊர்களில் இந்த கதை பயணிப்பதால் கதை போன போக்கிலேயே நாங்களும் பயணிக்கிறோம்.
நாதஸ்வரம் தொடரில் ஒரு சிலரைத்தவிர பெரும்பாலும் புதுமுகங்கள்தான். பார்த்த முகங்களையே பார்த்துக்கொண்டிருந்தால் ஆடியன்ஸிற்கு போரடிச்சிடுமே. அதான் கேமிரா என்றால் என்னவென்றே தெரியாத முகங்களா தேடினோம். தமிழகம் முழுக்க வலைவீசிதான் இத்தனை பேரை பிடிச்சோம். கேமிரா முன்னாடி நின்னு பழக்கமில்லாதவர்களை நடிக்கவைப்பது கஷ்டமான வேலை. ரோட்டில நடந்து போறவங்க எப்படி இருப்பாங்களோ அதுமாதிரி சாதாரணமா எளிமையா இருக்குறவங்களைதான் தேர்வு செய்தோம்.
காரைக்குடி செட்டிநாடு பகுதியில் ஒண்டிக்குடித்தனமாய் வாழக்கூடிய நாதஸ்வர வித்வானோட குடும்ப நிகழ்வுகள்தான் கதை. அதை சம்பந்தப்பட்ட பகுதிகளிலேயே எடுப்பதுதான் எதார்த்தமாக இருக்கும். அதான் சிட்டிக்கு வரலை. கதை அங்கு நகரும்போது சிட்டிக்கு வருவோம். சீரியலோட இயல்பை சிதைக்கக்கூடாது என்று நினைக்கிறேன்.
தமிழ் சினிமாவில் முழுக்க முழுக்க வெளிப்புற படப்பிடிப்பு நடத்தப்பட்ட படம் என்ற பெருமை '16 வயதினிலே' படத்திற்கு எப்படி இருக்கிறதோ, அதுமாதிரி ‘நாதஸ்வரம்' தொடருக்கும் பெருமை இருக்கு. முதல் முறையா முழுக்க முழுக்க அவுட்டோர் ஷூட்டிங் நடக்கும் தொடர் நாதஸ்வரம்தான் என்று பெருமை பொங்க கூறினார் திருமுருகன்.
Post a Comment