லண்டன்: இங்கிலாந்து எழுத்தாளர் இ.எல். ஜேம்ஸ் எழுத்தில் உருவாகி உலகம் பூராவும், குறிப்பாக இங்கிலாந்துப் பெண்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்திருக்கும் Fifty Shades of Grey நாவலைத் திரைப்படமாக்கும்போது அதில் தான் நாயகியாக நடிக்க விரும்புவதாக உதட்டழகி ஏஞ்செலீனா ஜூலி கூறியுள்ளார்.
இந்த நாவலில் வரும் அனஸ்தீசியா ஸ்டீல் என்ற பெண்ணின் கேரக்டரில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார் ஜூலி. இந்தப் பெண்ணின் கேரக்டர்தான் இந்த நாவலின் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.
மம்மி போர்ன் என்ற பெயரில் இங்கிலாந்து முழுவதும் ஆட்டிப்படைத்து வருகிறது ஜேம்ஸின் 50 ஷேட்ஸ் ஆப் கிரே நூல். இந்த நூலை இப்போடு மறுபடியும் மறுபடியும் படித்துக் கொண்டிருக்கிறாராம் ஜூலி. இங்கிலாந்துக்கு தனது புதிய படத்தின் ஷூட்டிங்குக்காக வந்த இடத்தில்தான் இந்தப் புத்தகத்தைக் கொடுத்து அறிமுகப்படுத்தினராம். அன்று முதல் ஜூலியும் பித்துப் பிடித்தாற் போலாகி விட்டாராம்.
இந்த நூலைப் படித்து முடித்தும் கூட அவருக்கு பாதிப்பு போகவில்லையாம். இதனால்தான் இந்த நூலின் நாயகியான அனஸ்தீசியா வேடத்தி்ல தான் சினிமாவில் நடிக்க விரும்புவதாக வெளிப்படையாக கூறியுள்ளார் ஜூலி.
இதுகுறித்து டெய்லி மிர்ரர் நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியில், தனது படப்பிடிப்பின்போது செட் முழுக்க பெண்களிடம் இந்த புத்தகம் குறித்த பேச்சாகவே இருந்ததால் அதுகுறித்து விசாரித்தார் ஜூலி. அவர்கள் புத்தகம் குறித்து சிலாகித்துப் பேசினர். இதனால் ஆர்வமடைந்த ஜூலி தானே நேரடியாக கடைக்குப் போய் புத்தகத்தை வாங்கிப் படித்துப் பார்த்தார். இப்போதும் அவரும் சிலிர்ப்படைந்து விட்டார்.
இந்த நிமிடத்தில் உலகம் முழுவதும் உள்ள பெண்களின் உதடுகளில் முனுமுனுக்கப்படும் இந்த நாவல் படமாக்கப்பட வேண்டும், அதில் தான் நடிக்க வேண்டும் என்று ஆர்வமாக உள்ளாராம் ஜூலி.
ஜூலி நடிச்சா அந்தப் படத்தோட ரேஞ்சே தனிதான்...!
Post a Comment