நான் 'போர்ன் மம்மி'யா?... மறுக்கிறார் எம்மா வாட்சன்!

|

Emma Watson Denies Being Cast As An Anastasia Steele

லண்டன்: பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே நூல் படமாகப் போகிறது. அந்தப் படத்தில் ஹீரோயின் ரோலில் யார் நடிக்கப் போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏஞ்செலீனா ஜூலி தான் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார். இந்த நிலையில் எம்மா வாட்சனை இப்படத்தில் நாயகியாக நடிக்க அணுகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதை அவர் மறுத்துள்ளார்.

இங்கிலாந்து பெண் எழுத்தாளர் இஎல் ஜேம்ஸ் எழுதிய நாவலான பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நூலாகும். விற்பனையில் பெரும் சாதனை படைத்த அந்த நாவல் ஒரு போர்ன் நாவலாகும். இந்த நூல் இல்லாத பெண்களை இங்கிலாந்தில் இல்லை என்று கூறும் அளவுக்கு பரபரப்பையும், விறுவிறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த நாவலைப் படமாக எடுக்கப் போகிறார்களாம். அதில் நடிக்க பல நடிகைகளும் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக ஏஞ்செலீனா ஜூலி வெளிப்படையாக ஆர்வம் தெரிவித்துள்ளார். அதேசமயம், படத்தின் முக்கிய வேடமான அனஸ்தீசியா ஸ்டீல் ரோலில் நடிக்க எம்மா வாட்சனை தேர்வு செய்துள்ளதாகவும், அவரிடம் கதை கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் அதை வாட்சன் மறுத்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக ஹாரி பாட்டர் திரைப்படங்களில் நடித்துக் கலக்கியவர்தான் எம்மா வாட்சன். இந்த நிலையில் அவரைத் தேடி பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே திரைப்படம் தேடி வந்துள்ளது. அதுவும் போர்ன் மம்மி கேரக்டரில் நடிக்க.

இருப்பினும் தான் இதில் நடிப்பது குறித்து யாரும் அணுகவில்லை, என்றும் படத்தின் திரைக்கதையை தான் இன்னும் படிக்கவில்லை என்றும் கூறியுள்ளார் எம்மா.

22 வயதான எம்மா இதுகுறித்துக் கூறுகையில், இதுதொடர்பாக யாரும் என்னிடம் இதுவரை பேசவில்லை. மேலும் இதில் தான் நடிக்கும் வாய்ப்பு இல்லை. அந்த நூலைக் கூட நான் இதுவரை படிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஜூலி தானாக முன்வந்து விருப்பம் தெரிவித்திருக்க, எம்மாவின் பெயர் அடிபட, அதேபோல கேத்தி கேஸிடியின் பெயரும் இதுதொடர்பாக அடிபட ஆரம்பித்துள்ளது. இவர்களைப் போல மேலும் பல நாயகிகளின் பெயரும் அடிபட ஆரம்பித்துள்ளதால், யார் அந்த மயக்கும் மாயக் கன்னியின் ரோலில் நடிக்கப் போகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

 

Post a Comment