காலை நேரத்தில் சேனல் மாற்றிக்கொண்டே வந்த போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சியர்ஸ் கேர்ள்ஸ் போல உடையணிந்த நான்கு இளம் பெண்கள் இசைக்கேற்ப உற்சாக நடனமாடிக்கொண்டிருந்தார்கள். என்ன நிகழ்ச்சியாக இருக்கும் என்று பார்த்தால் புதிதாக ஒளிபரப்பாகி வரும் ‘ஆயிரத்தில் ஒருவன்' என்ற நிகழ்ச்சி என்று தெரியவந்தது.
ஜாக்பாட், ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சிகளைப் போல இதுவும் கேள்விக்கு பதில் கூறி சரியான விடைக்கு பணத்தை பரிசாக வெல்லும் நிகழ்ச்சி இது. பிரபல திரைப்படத்தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் அவர்களின் மகன் சுப்பு இதனை தொகுத்து வழங்குகிறார்.
சின்னத்திரையில் அரசி தொடரில் வில்லனாக அனைவராலும் அறியப்பட்ட சுப்பு, விளம்பரம், திரைப்படம் என நடித்து வருகிறார். பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவின் அண்ணனாக நடித்திருந்தார். இப்பொழுது சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
ஆயிரத்தில் ஒருவன் நிகழ்ச்சியில் கேள்விக்கு சரியான பதிலை கூறிவிட்டால் பணம் பரிசாக கொண்டுக்கப்படுகிறது. வெற்றி பெற்றவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சியர்ஸ் கேர்ள்ஸ் நடனமாடுவதுதான் பிற சேனல்களில் இல்லாத புதுமை.
Post a Comment