லாஸ் ஏஞ்சலெஸ்: தி கேன்யான்ஸ் என்ற படத்தில் நடிக்கும் ஹாலிவுட் ஹாட் நடிகை லின்ட்சே லோஹன், தான் நடிக்கவிருந்த ஒரு படுக்கை அறைக்காட்சியின்போது கூட இருந்தவர்களையும் டிரஸ்ஸைக் கழற்றுமாறு கேட்டுக் கொண்டதால் அத்தனை பேருக்கும் கிளுகிளுப்பாகி விட்டதாம். நீங்கள் கழற்றினால்தான் நானும் டிரஸ்ஸைக் கழற்றுவேன் என்று லின்ட்சே பிடிவாதமாக கூறியதால் நெளிந்து போய் விட்டார்களாம். இருந்தாலும் கடைசியில் லின்ட்சேதான் ஜெயித்தாராம்....!
தி பிளேபாய் படத்தில் நிர்வாணமாக நடித்தவர்தான் லின்ட்சே. இந்த நிலையில் தற்போது தி கேன்யான்ஸ் என்ற படத்தில் மேலாடை இல்லாமல் வெற்று மார்புடன் நடிப்பது போல ஒரு காட்சி வருகிறது. இதற்கான படப்பிடிப்பு நடந்தபோது லின்ட்சே ஒரு கண்டிஷன் போட்டார்.
அதாவது நான் மேலாடையைக் கழற்றும்போது இங்கே உள்ள கேமராமேன் உள்ளிட்ட படக் குழுவினரும் தங்களது உடைகளைக் கழற்றி விட வேண்டும். ஜட்டி மட்டும் வேண்டுமானால் இருந்து விட்டுப் போகட்டும், நீங்கள் கழற்றினால்தான் நானும் கழற்றுவேன் என்று கூறி விட்டாராம்.
இதைக் கேட்டு அதிர்ந்து போன படக் குழுவினர் என்னடா இது ஹாலிவுட்டுக்கு வந்த நூதனச் சோதனை என்று தயங்கியுள்ளனர். இருந்தாலும் லின்ட்சே விடாமல் பிடிவாதமாக இருந்ததால் வேறு வழியின்றி அத்தனை பேரும் ஜட்டிக்கு மாறினார்கள். வெறும் ஜட்டியுடன் படக் குழுவினர் சுற்றி நிற்க லின்ட்சே தனது மேலாடையைத் துறந்தார், நெருக்கமான அந்தக் காட்சியை நெகிழ்ச்சியாக நடித்துக் கொடுத்தார்.
இப்படி ஒரு ஆடை அவிழ்ப்புச் சம்பவம் உலகில் எந்த திரையுலகிலும் நடந்ததில்லை என்று கூறுகிறார்கள்.
நல்லவேளை கோலிவுட்டில் இப்படி ஒரு நடிகை வரவில்லை, இருந்திருந்தால், பலருக்கு பேதி கிளம்பியிருக்கும்... காரணம், இங்கு பலரும் விரும்பி அணிவது பட்டா பட்டியாச்சே...!
Post a Comment