‘26/11’ ராம்கோபால் வர்மாவுக்கு நோ சொன்ன ரயில்வேத்துறை

|

Rgv S Cst Shoot Stopped Its Tracks

மும்பை: மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் சூட்டிங் நடத்த அனுமதி கிடைக்காததால் ராம்கோபால்வர்மாவின் ‘26/11' படத்திற்கு மீண்டும் சிக்கல் உருவாகியுள்ளது.

மும்பை தாக்குதல் சம்பவத்தை மையமாக வைத்து ராம்கோபால்வர்மா ‘26/11' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்காக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் படப்பிடிப்பு நடத்தவேண்டும். இதற்காக ரயில்வே துறையிடம் அனுமதி கோரி ராம்கோபால்வர்மா கடிதம் எழுதியிருந்தார்.

அக்டோபார் 10ம் தேதிமுதல் 14ம் தேதிவரை சூட்டிங் நடத்தவேண்டும் என்றும் அதற்கு அனுமதிக்கவேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். ஆனால் அந்த கடிதத்தை ரயில்வேத்துறை நிராகரித்துவிட்டது. இதற்காக 6 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யவும் தயாராக இருப்பதாக ராம்கோபால் வர்மா கூறியிருந்த நிலையிலும் அவருக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அப்செட் ஆன வர்மா சூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு பேக் அப் சொல்லிவிட்டாராம்.

25 லட்சம் நஷ்டம்

ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்காததற்கு சினிமாத்துறையினரிடம் ஏற்பட்ட முந்தைய அனுபவமே காரணம் என்று கூறப்படுகிறது. தி பர்னிங் ட்ரெயின் திரைப்படத்திற்காக ரயிலில் படப்பிடிப்பு நடத்தியவர்கள் ஒரு பெட்டியையே எரித்துவிட்டனராம். அந்த படம் எடுப்பதற்கு அனுமதி கொடுத்ததற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு 25 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாம். ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் வெறும் 5ஆயிரம் ரூபாய் மட்டுமே டெபாசிட் செலுத்தியிருந்தனராம். எந்தவித அக்ரிமென்டும் இல்லாத காரணத்தினால் அவர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்க முடியாமல் போய்விட்டதே இப்போது சினிமா சூட்டிங் நடத்த அனுமதி கொடுக்கமாட்டேன் என்கின்றனர்.

 

Post a Comment