நடிப்புக்கு முழுக்கு போட்டார் நடிகை சம்விருதா. தமிழில் 'காதல் முடிச்சு', 'காதல் செய்வோம்', 'உயிர்' உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பதுடன் ஏராளமான மலையாள படங்களில் நடித்திருப்பவர் சம்விருதா. இவருக்கு வரும் நவம்பர் 1ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடிப்புக்கு முழுக்கு போட்டார். சமீபத்தில் மலை யாள நடிகர் லால் ஜோஸ் இயக்கும் 'ஆயாளும் ஞானும் தம்மில்' படத்தில் நடித்த கடைசி காட்சி கேரளாவில் படமாக்கப்பட்டது. இதுபற்றி இயக்குனர் லால் கூறும்போது, 'ஆயாளும் ஞானும் தம்மில் பட இறுதிகட்ட ஷூட்டிங் மூணாறில் நடந்தது. இது உணர்வுபூர்வமான ஷூட்டிங்காக அமைந்தது. ஏனென்றால் திறமையான சம்விருதாவின் கடைசி நாள் ஷூட்டிங்காக இது அமைந்தது. இப்படம் இம்மாதம் திரைக்கு வரவுள்ளது' என்றார். இந்நிலையில் சம்விருதா நடித்துள்ள மற்றொரு படமும் இம்மாதம் திரைக்கு வருகிறது.
Post a Comment