செல்வராகவன் முன் ஜாமீன் கோரி மனு

|

Selvaraghavan's bail petition

திரைப்பட இயக்குனர் செல்வராகவன் முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். திரைப்பட இயக்குனர் செல்வராகவன் சென்னை உயர் நீதிமன்றத்தில்  தாக் கல் செய்துள்ள முன்ஜாமீன் மனு: 'காசிமேடு' படம் இயக்க எனக்கு தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர் ரூ.2 கோடி சம்பளம் தருவதாக பேசினார். இதற்கு முன் பணமாக ^90 லட்சம் கொடுத்தார். பின்னர் படம் எடுக்க முடியவில்லை. இதனால் அதற்காக நான் வாங்கிய சம்பளத்தை சந்திரசேகரிடம் கொடுத்துவிட்டேன். இருந்தாலும் என்னிடம் பணம் கேட்டு என் மீது சந்திரசேகர் பொய்யாக போலீசில் புகார் கொடுத்தார். இதனால் நான் சமரச மையம் சென்று ரூ.10 லட்சத்தை கொடுத்து விட்டேன்.

அப்படி இருந்தும் என் மீது மீண்டும் புகார் கொடுத்துவிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் என்னை கைது செய்துவிடுவார்களோ என்று அஞ்சுகிறேன். எனவே எனக்கு முன் ஜாமீன் தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதை விசாரித்த நீதிபதி அக்பர்அலி, விசாரணையை வரும் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை மனுதாரை கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.
 

Post a Comment