இயல், இசை, நாடகம் முக்கலைகளும் இணைந்ததுதான் நவராத்திரி. நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகைக்காக விஜய் டிவி மஞ்சள் குங்குமம் என்ற சிறப்பு நிகழ்ச்சியை காலை 7மணிக்கு ஒளிபரப்பிவருகிறது.
இரண்டாம் நாளான இன்றைய நிகழ்ச்சியில் நவராத்திரி பிறந்த கதையை அனைவருக்கும் புரியும் வகையில் சொன்னார் ரேவதி சங்கரன்.
விஐபி வீட்டுக் கொலுவில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ரத்னா அவர்களின் வீட்டு கொலுவை இன்றைக்கு ஒளிபரப்பினார்கள். ‘பார்த்தன் பார்வையில் பரந்தாமன்' என்ற கருவை மையமாக வைத்து ரத்னா கொலு அமைத்திருந்தார். கீதோபதேசத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த அந்த கொலு பெரிதும் கவர்ந்தது.
இதனையடுத்து திருவண்ணாமலை கோவிலை மையமாக வைத்து கொலு அமைந்திருந்தார் ரத்னா. அண்ணாமலையார் ஆலயம், மலை, கிரிவலப்பாதை, அஷ்ட லிங்கங்கள், மகான்களின் ஆசிமரங்கள், திருவண்ணாமலை பேருந்துநிலையம் என தத்ரூபாமாக அமைந்திருந்தது கொலு பிரியர்களை பெரிதும் கவர்ந்தது.
கொலுவின் வைப்பதன் முக்கிய அம்சமே நம் வீட்டிற்கு உறவினர்களையும், நண்பர்களையும் வரவழைத்து அவர்களுக்கு பிரசாதமும், பரிசும் கொடுத்து வாழ்த்துவதுதான்.
புரட்டாசி மாதத்தில் மழைக்காலம் என்பதால் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் நோய் நொடி தாக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற புரதச்சத்து நிறைந்த உணவு நைவேத்தியமாக படைக்கப்பட்டு பின்னர் அது பிரசாதமாக வழங்கப்படுகிறது. நம் முன்னோர்கள் கொண்டாடிய பண்டிகைகள் அனைத்திற்கும் ஒரு அர்த்தம் உள்ளது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
இதுபோன்ற சிறப்பான நிகழ்ச்சியை காலை நேரத்தில் விஜய் டிவி ஒளிபரப்புவது பயனுள்ள வகையில் இருக்கிறது என்கின்றனர் ரசிகர்கள்.
Post a Comment