சினிமாவில் வட்டி விஷயங்கள் புதிதில்லை என்றாலும் சமீபகாலமாக வட்டியில் அதிகமாக சிக்கித் தவித்து வருகிறது கோடம்பாக்கம். பொதுவாக வட்டிக்கு கடன் வாங்கி படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு யாரும் படத்தை துவக்குவது இல்லை. தங்களிடம் உள்ள தொகையோடு, படத்தில் நடிக்கும், ஹீரோ, இயக்குனர்களை பொறுத்து, வினியோகஸ்தர்கள் கொடுக்கும் முன் பணத்தைக் கொண்டு தயாரிக்க ஆரம்பிப்பார்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் கடைசி நேரத்தில் பணத்தட்டுப்பாடு வந்தால் வட்டிக்கு வாங்கி சமாளித்து வந்தார்கள். 1990 வரை இதுதான் நிலைமை.
பிறகு சினிமாவில் கந்துவட்டியும், அதையொட்டிய தாதாயிசமும் நுழைந்தது.
பலர் பெரும் தொகையை வட்டித் தொழிலில் இறக்கினார்கள். மற்ற தொழில்களைப் போல சினிமாவில் பணம் திரும்பி வர உத்தரவாதம் கிடையாது என்பதால் வட்டியும் அதிகம். முன்பெல்லாம் ஒன்று முதல் 3 சதவிகிதமாக இருந்த வட்டி, கந்துவட்டி, மீட்டர் வட்டிக்குப் பிறகு 5 முதல் 10 சதவிகிதமாக உயர்ந்தது. டாக்குமென்ட்களில் ஒரு சதவிகிதம் என்றே குறிப்பிடப்படும். ஆனால் நிஜத்தில் அதிலிருந்து பல மடங்கு வட்டி இருக்கும்.
முன்பு கடைசி நேரத்தில் வட்டிக்கு பணம் வாங்கினார்கள். இப்போது கையில் ஒரு காசு கூட இல்லாமல் வட்டிக்கு வாங்கி படம் எடுப்பவர்கள் அதிகம். ஒரு முன்னணி ஹீரோவின் கால்ஷீட்டை வாங்கி விட்டால், அதையே ஆதாரமாகக் காட்டி சில கோடிகளை வட்டிக்கு வாங்கிவிட முடியும். அதை வைத்து ஒரு ஷெட்யூல் முடித்தால் பின்பு அதைக் காட்டியே வினியோகஸ்தர்கள், தொலைக்காட்சி உரிமம், வெளிநாட்டு உரிமம் ஆகியவற்றில் பணத்தை பெற்றுக் கொண்டு மீதி படத்தை முடித்து விடுவார்கள். படம் நல்லபடியாக தயாராகி, வியாபாரமாகி, வெற்றி பெற்றால் பிரச்னை இல்லை. ஒரு ரூபாய் கூட முதலீடு இல்லாமல் தயாரித்த தயாரிப்பாளர் பலகோடி லாபம் பார்ப்பார். வட்டிக்காரர்களுக்கு பெரும் தொகை வட்டியாக கிடைக்கும். இதில் ஏதாவது ஒரு இடத்தில் சிக்கல் ஏற்பட்டால், குறிப்பாக படம் தயாராவதில் தாமதம், அல்லது தோல்வி ஏற்பட்டால் மொத்தமும் டமால்தான். பிறகு கட்டப்பஞ்சாயத்து, கோர்ட் என்று விஷயம் வீதிக்கு வரும்.
சில வங்கிகள் படத் தயாரிப்புக்கு கடன் உதவி செய்து வந்தது. அதுவும் அந்த தயாரிப்பாளரின் பிற சொத்துக்களின் பேரில்தான் கொடுத்தது. அதிலும் பணம் திரும்பி வருவதில் சுணக்கம் இருந்ததால் நிறுத்தி விட்டது. சமீபத்தில் தயாரிப்பாளர் ஒருவர், படத்தில் நடிக்க ஹீரோ ஒருவருக்கு ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தார். ஆனால் அவரால் 6 மாதம் வரை படத்தை துவக்க முடியவில்லை. வாங்கிய பணத்துக்கு வட்டி எகிறியது. தயாரிப்பாளர் சங்கம், மற்றும் நடிகர் சங்க விதிப்படி அட்வான்ஸ் கொடுத்துவிட்டு ஒரு நாள் படப்பிடிப்பு நடந்தால் கூட நடிகர் அட்வான்சை திருப்பித் தரவேண்டியதில்லை. இவரோ அந்த நடிகரை வைத்து இரண்டு நாள் படப்பிடிப்பு வேறு நடத்திவிட்டார். ஆனாலும் அந்த ஹீரோ மனசாட்சிப்படி பணத்தை சில மாதங்களுக்கு பிறகு திருப்பிக் கொடுத்தார். அதைக் கொண்டு அவர் வாங்கிய கடனுக்கு வட்டிதான் கட்ட முடிந்தது. அந்த கோடி ரூபாய் கடன் அப்படியே இருந்தது. இப்போது அவர் வீட்டை விற்று பாதி கடனை அடைத்து பரிதவித்துக் கொண்டிருக்கிறார். இப்படி பல தயாரிப்பாளர்கள் காணமல் போயிருக்கிறார்கள்.
வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் புத்திசாலித்தனமாக லேப்புடன் இணைத்து ஒப்பந்தம் போட்டு விடுவதால் படத்தை வெளியிடும்போது கழுத்தை நெரிப்பது போல வந்து நிற்பார்கள். இப்போதும் 50 சதவிகிதத்துக்கும் மேலான படப் பெட்டிகள் லேப்பின் வாசலில் பஞ்சாயத்தோடும், தயாரிப்பாளரின் கண்ணீரோடும்தான் வெளியே வருகிறது. 'எல்லா காலத்திலும், பெரிய தயாரிப்பாளர்கள், பெரிய ஹீரோக்களை, இயக்குனர்களை நம்பித்தான் வட்டிக்கு கடன் கொடுப்பார்கள்.
சிறு தயாரிப்பாளர்களுக்கு யாரும் கடன் தருவதில்லை. கடன் பெறும் தயாரிப்பாளர்கள் சரியான திட்டமிடுதல் இல்லாமை, தாமதம், தோல்வி இவற்றால் இந்த வட்டிக்குள் வாழ்க்கையை இழந்து விடுகிறார்கள். முறையான திட்டமிடுதல் இன்றி கடன் வாங்கி படம் எடுக்க வந்தால், யாராக இருந்தாலும் வட்டிக்குள் சிக்காமல் தவிர்க்க முடியாது. வெளிநாட்டில் இந்தப் பிரச்னை இல்லை. அங்கு பைரஸி கிடையாது, சினிமாவை தொழிலாக பார்க்கிறார்கள். கடைசி ஒரு பைசா லாபம் வரை தயாரிப்பாளருக்கு சென்று சேர்ந்து விடுகிறது. அதனால் வங்கிகள் கடன் கொடுக்கிறது. அப்படியொரு நிலை இங்கு வரும் வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை' என்கிறார் தயாரிப்பாளரும், வினியோகஸ்தருமான கலைப்புலி ஜி.சேகரன்.

Post a Comment