எஸ்ரா சற்குணம் சொன்னதால் 'நீர்ப்பறவை' பாடல் வரிகள் நீக்கம்!

|

Neerparavai Lyrics Edited   

பேராயர் எஸ்ரா சற்குணம் கேட்டுக் கொண்டதால், நீர்ப்பறவை படத்திலிருந்து சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்பட்டதாக இயக்குநர் சீனு ராமசாமி அறிவித்துள்ளார்.

'நீர்ப்பறவை' என்ற படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் பற... பற... என்ற பாடலில் இடம்பெற்ற வரிகளுக்கு கிறிஸ்தவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

பைபிள் வாசகங்களை காதல் பாடலில் சேர்த்ததற்காக, அந்தப் பாடலை எழுதிய கவிஞர் வைரமுத்து வீட்டின் எதிரில் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதுகுறித்து டைரக்டர் சீனுராமசாமி வெளியிட்ட அறிக்கையில், "பேராயர் எஸ்றா சற்குணம் வேண்டுகோளை ஏற்று ‘நீர்ப்பறவை' திரைப்படத்தில் ‘பற... பற..' என்கிற பாடலில் இடம் பெற்ற ‘ஸ்தோத்திரம் மற்றும் சத்தியமும் ஜீவனுமாய் நிலைக்கிறேன்...' என்கிற சொற்களை நீக்குகிறோம்.

சிறுபான்மை மக்களின் அன்பான வாழ்க்கையை சொல்லும் திரைப்படமாக ‘நீர்ப்பறவை' இருக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Post a Comment