மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் கடல் படத்தின் ஒற்றைப் பாடல் வரும் நவம்பர் 3-ம் தேதி எம்டிவியில் ஒளிபரப்பப்படுகிறது.
படத்துக்கான எதிர்ப்பார்ப்பை விட, ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குத்தான் உலகெங்கும் ரசிகர்கள் அதிகம் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ‘நெஞ்சுக்குள்ளே..' என்ற ஒரு பாடலை மட்டும் வரும் 3-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்களுக்கு இந்த பாடலை ஒரே நேரத்தில் கொண்டு சேர்ப்பதற்காக எம்.டி.வி மூலம் வெளியிடவிருக்கிறார்கள்.
இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நேரடியாகவே இசையமைக்க போகிறார். இந்த நிகழ்ச்சி வரும் 3-ம் தேதி இரவு 8 மணிக்கு எம்.டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
A Single song from A R Rahman's much awaited musical album, Maniratnam's Kadal will be released through MTV on Nov 3.