
மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, பேஸ்புக்கில் தனது பக்கத்தை வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினார். அதில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், ''உங்களிடம் நேரடியாக தொடர்புகொள்ள இது சிறந்த வழி என நினைக்கிறேன். எனது படங்கள் மற்றும் செய்திகளையும் எனது அறக்கட்டளை தொடர்பான விஷயங்களையும் இதில் அடிக்கடி அப்டேட் செய்ய இருக்கிறேன். நான் நடித்து வரும் படங்களில் இருந்து வெளியிடப்படாத கிளிப்பிங்ஸ்களையும் இதில் இணைக்க இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.இதுபற்றி அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ''பேஸ்புக் மூலம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் நேரடியாகத் தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி. இதன் மூலம் எனது படம் மற்றும் நடிப்பு பற்றிய கருத்துகளையும் விமர்சனங்களையும் ரசிகர்களிடம் இருந்து வெளிப்படையாகத் தெரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. அப்படி தெரியும்போது, என்னை இன்னும் வளர்த்துக்கொள்ள அது உதவியாக அமையும்'' என்று கூறியுள்ளார்.
Post a Comment