அஜீத் படத்தில் நடிக்க தமன்னாவுக்கு ரூ 1.5 கோடி... மீண்டும் குவியும் வாய்ப்புகள்!

|

Tamanna Gets Whopping Rs 1 5 Cr Ajith Movie   

அஜீத் படத்தில் நடிக்க தமன்னாவுக்கு ரூ 1.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்துக்குப் பிறகு தொடர்ச்சியாக தமிழ் படங்களில் நடிக்கிறாராம் தமன்னா.

2010-2011 ஆகிய இரு ஆண்டுகளிலும் கோடம்பாக்கத்தைக் கலக்கியவர் தமன்னா. ஆண்டு முழுவதும் அவரது படங்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன.

ஆனால் ஒரு காதல் பிரச்சினை அவரை அப்படியே கவிழ்த்துவிட்டது. கோடம்பாக்கத்தை காலி செய்து கொண்டு ஹைதராபாதுக்கே போக வேண்டிய நிலைக்கு அவரைத் தள்ளியது.

தனக்குப் படங்கள் வராமல் போனதற்குக் காரணம் குறிப்பிட்ட ஒரு நடிகரும் அவரது குடும்பத்தினரும்தான் என்று தமன்னா பல முறை புகாராகக் கூறிவந்தார். நேரம் வரும்போது அவர்கள் பெயரை வெளியிடப் போவதாகவும் கூறினார்.

இந்த நிலையில், எந்த தவறான பிரச்சாரத்தையும் நம்பாத அஜீத், சிறுத்தை சிவா இயக்கும் தனது புதிய படத்தில் நாயகியாக தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளார். அதுவும் தமன்னா எந்த பேரமும் பேசும் முன்பே, அவருக்கு ரூ 1.5 கோடி தருவதாகக் கூறி வாயடைக்கச் செய்துவிட்டார்களாம்.

அஜீத் பட வாய்ப்பு வந்த நேரம்.. மீண்டும் பெரிய தயாரிப்பாளர்கள் தமன்னாவுக்கு அட்வான்ஸ் தர நேரம் கேட்டுள்ளார்களாம்.

இப்போது தமன்னா மகா உற்சாகத்திலும், தன் வாய்ப்புகளை தடுத்தவர்கள் மீது கோபத்திலும் உள்ளார். அஜீத் படம் வெளியாகட்டும். அதன் பிறகு என் வளர்ச்சியைத் தடுத்தவர்கள் பற்றி புட்டுப் புட்டு வைக்கிறேன், என்கிறாராம்.

பார்த்துங்க அம்மணி... புட்டுக்கப் போகுது!

 

Post a Comment