இந்த பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் படங்களில் அதிகபட்ச நம்பிக்கையுடன், எந்த சச்சரவுமில்லாமல் வெளியாகும் ஒரே க்ளீன் படம் என்றால் அது அநேகமாக கார்த்தி நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன்தான்.
இந்தப் படத்துக்கு அதிகபட்ச திரையரங்குகளும் கிடைத்துள்ளன. பெரிய அளவில் டிக்கெட் முன்பதிவை எதிர்ப்பார்ப்பதால், வரும் ஜனவரி 11-ம் தேதியன்றே படத்தை வெளியிட ஸ்டுடியோ கிரீன் முடிவு செய்துள்ளது.
முன்னதாக வரும் ஜனவரி 12 சனிக்கிழமைதான் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தார்கள்.
கார்த்தி - அனுஷ்கா - சந்தானம் நடித்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் பட்டையைக் கிளப்ப ஆரம்பித்துள்ளன. குறிப்பாக கங்னம் ஸ்டைலில் அமைக்கப்பட்டுள்ள பேட் பாய் பாடல்.
சுராஜ் இயக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 400-க்கும் அதிகமான அரங்குகளில் தமிழகத்தில் வெளியாகிறது. ஆந்திராவிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது.
Post a Comment