மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் பெண்களை அடித்து துன்புறுத்துபவர் என்று பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் இருந்து வெளியேற்றப்பட்ட சிகை அலங்கார நிபுணர் சப்னா பாவ்னானி தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் இருந்து சிகை அலங்கார நிபுணர் சப்னா பாவ்னானி(42) அண்மையில் வெளியேற்றப்பட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
சல்மானை இந்தியாவின் மிகப்பெரிய நடிகராக நான் பார்க்கவில்லை. என்னைப் பொறுத்தவரை அவர் சாதாரண மனிதர் அதனால் அவர் ஏதாவது தவறாகக் கூறினால் அது குறித்து கருத்து தெரிவிக்க நான் பயப்படவில்லை. பின்விளைவுகளை நினைத்து நான் அஞ்சவில்லை. எனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதையே செய்வேன்.
சல்மான் ஒரு ஆணாதிக்கவாதி. அவர் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே பாகுபாடு பார்ப்பவர். பெண் போட்டியாளர்களைப் பார்த்து உங்களால் முடியாது என்பார். அவர் பெண்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டார். அவர் பெண்களை அடித்து துன்புறுத்துபவர்.
பிக் பாஸ் ஷோவில் கலந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. பிக் பாஸ் வீட்டில் தங்கியதில் மகிழ்ச்சியாக இருந்தது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாலும் அங்கு பழகிய அசீம் திரிவேதி, நிகேத்தன், தினேஷ், கரிஷ்மா மற்றும் ஊர்வசி ஆகியோருடன் தொடர்பில் இருப்பேன். அசீம் எனக்கு சகோதரர் மாதிரி. அதே சமயம் ராஜீவ் பால், சனா கானுடன் தொடர்பில் இருக்க விரும்பவில்லை. அவர்கள் போலியாக பழகுகின்றனர் என்றார்.
சல்மானின் கானின் முன்னாள் காதலிகள் ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைப் ஆகியோர் அவரிடம் அடி வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment